“நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் ”– ரியாத் மண்டலம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22.09.2014 திங்கள் கிழமை இரவு 08:30 மணிக்கு ரியாத் மண்டல TNTJ அலுவலகத்தில் மண்டல நிர்வாகக் கூட்டுக்குழு கூட்டம் மண்டலச் செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா தலைமையில் நடைபெற்றது. மண்டல அணிச் செயலாளர் சகோ. குலசேகரம் சாதிக் துவக்கவுரையாற்றினார். ரியாத் மண்டல நிர்வாகிகள் மற்றும் அணிச் செயலாளர்கள் கலந்து கொண்ட இந்த அமர்வில் முக்கியமாக எதிர்கால திட்டங்கள் குறித்து பேசப்பட்டது,இறை மார்க்கத்தை அதன் தூய வடிவில் அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் பணியில் ஒத்துழைப்புகளையும், உதவிகளையு ம் அனைவரும் நல்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டு துஆவுடன் கூட்டம் இரவு 11 மணிக்கு நிறைவுற்றது.
No comments:
Post a Comment