அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம்”– ரியாத் மண்டலம் 08.09.2014

நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் ரியாத் மண்டலம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 08.09.2014 திங்கள் கிழமை இரவு08:30 மணிக்கு ரியாத் மண்டல TNTJ அலுவலகத்தில் மண்டல நிர்வாகக் கூட்டுக்குழு கூட்டம்  நடைபெற்றது.

ரியாத் மண்டல நிர்வாகிகள் மற்றும் அணிச் செயலாளர்கள் கலந்து கொண்ட இந்த அமர்வில் முக்கியமாக எதிர் வரும் செப்டம்பர் 19-ல் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையோடு சேர்ந்து 32ஆவது இரத்ததான முகாமை ஏற்பாடு செய்து நடத்திட வேண்டிய ஆலோசனைகள் மற்றும் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

மேலும் மீஞ்சூர் முதியோர் இல்லக் கட்டிடத்திற்கான ரியாத் பங்களிப்பை இன்ஷா அல்லாஹ் விரைந்து முடிக்கும் விதமாக குழு ஒன்று அமைக்கப்பட்டு அதற்கான இறுதித் தேதியும் குறிக்கப்பட்டது..

ரியாத் மர்கஸில் தாஃயிகள் பயிற்சி எதிர்வரும் வெள்ளி்க்கிழமை நடத்துவதற்கான முன்னேற்பாடும் மற்றும் கிளைகளில் தர்பியாக்கள் நடத்த வேண்டிய திட்டம்மேலும் பல நல்ல அம்சங்களை முன் வைத்து நடந்த இந்த நிர்வாகக் குழு அமர்வுஇறை மார்க்கத்தை அதன் தூய வடிவில் அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் பணியில் தம்மால் இயன்ற ஒத்துழைப்புகளையும்உதவிகளையும் அனைவரும் நல்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டு துஆவுடன் கூட்டம் இரவு 11 மணிக்கு நிறைவுற்றது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.