அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

”இப்ராஹிம் நபியின் தியாக வரலாறு"ஆன்லைன் தஃவா - லைலா அஃப்லாஜ் கிளை 26.09.2014



இப்ராஹிம் நபியின் தியாக வரலாறு”– ஆன்லைன் நிகழ்ச்சி லைலா அஃப்லாஜ் கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலத்திற்குட்பட்ட தொலைதூர கிளைகளில் ஒன்றான லைலா அஃப்லாஜ் கிளையில் 26.09.2014  வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகைக்குப் பின் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் ஆன்லைன் தஃவா ஏற்பாடு செய்யப்பட்டது.  மாநில  பேச்சாளர் சகோதரர் அப்துல் கரீம், இப்றாஹிம் நபியின் தியாக வரலாறு என்ற தலைப்பில் ஆன்லைனில் Skype வாயிலாக உரையாற்றினார்.  அதைத் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதிலுரைத்தவர்களுக்கு நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை புரொஜெக்டர் மூலம் ரியாத் மண்டலம் ஏற்பாடு செய்து ஒளிபரப்புச் செய்தது.  அதைத் தொடர்ந்து மண்டல துணைச் செயலாளர் சகோ. முஹம்மது ஷாகீர் மண்டல மாநிலச் செய்திகளை எடுத்துரைக்க மதியம் 2 மணிக்கு உணவுடன் நிகழ்ச்சி நிறைவு  செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.