அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

TNTJ கூட்டுக் குர்பானி திட்டம் 2014

TNTJ கூட்டுக் குர்பானி திட்டம் 2014

குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இன்ஷா அல்லாஹ் குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது.
நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி) நூற்கள் : முஸ்லிம் (3655), நஸயீ (4285)

ஆனால் ஒருவருக்கு முதல் 10 நாட்களுக்கு இடையில் கொடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அவர் எப்போது குர்பானிக் கொடுப்பதாக எண்ணிக் கொண்டாரோ அப்போதிலிருந்து கொடுக்கும் வரை இவற்றை வெட்டக்கூடாது. ஏனென்றால் குர்பானி கொடுப்பதாக அவர் முடிவெடுக்கும் போது தான் இந்தத் தடை ஏற்படும்.
தன்னுடைய முயற்சியின்றி தானாக நகம் முடி ஆகியவை விழுந்தால் இதில் தவறேதுமில்லை. மேலும், காயம் அல்லது அறுவை சிகிச்சை போன்ற தவிர்க்க முடியாத சமயங்களிலும் இவ்வாறு செய்து கொள்வதில் தவறு இல்லை.

குடும்பத்தை நடத்திச் செல்பவர் தன் குடும்பத்தின் சார்பாக குர்பானி கொடுப்பார். இவர் மட்டும் நகம் முடிகளைக் களையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் இவ்வாறு கடைப்பிடிக்க வேண்டியதில்லை. அனைவரும் கட்டாயம் இதைக் கடைபிடிப்பதாக இருந்தால் நபித்தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கட்டளையிட்டிருப்பார்கள். ஏழை எளிய மக்களுக்கு முறையாக கொண்டு சேர்ப்பிக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தக் கூட்டுக்குர்பானி திட்டத்தில் நீங்களும் பங்கு கொள்ள தொடர்பு கொள்வீர்.
                                                                                                         

தங்களது குர்பானிக்கான தொகையை செலுத்திட ரியாத் மண்டலத் தொடர்புக்கு
சகோ. முஹம்மது ஷாகீர் 0507946557
கடைசி தேதி :- 02/10/2014  வியாழக்கிழமை
இவண்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  
ரியாத் மண்டலம், Tel: 4021854



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.