“இப்றாஹிம் நபியின் தவ்ஹீத் குடும்பம்” – கதீம் செனைய்யா கிளை (பெண்கள்) நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கதீம் செனைய்யா கிளையின் சார்பாக பெண்களுக்கான மார்க்க விளக்க நிகழ்ச்சி 11.09.2014 வியாழனன்று இரவு 9 மணிக்கு கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில், மண்டல பேச்சாளர் சகோதரர் முஹம்மது அமீன் அவர்கள், “இப்றாஹிம் நபியின் தவ்ஹீத் குடும்பம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மண்டல மாநில செய்திகளை மண்டலத் துணைச் செயலாளர் சகோ. முஹம்மது ஷாகீர் எடுத்துரைத்தார். இதில் ஏராளமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No comments:
Post a Comment