“32 வது இரத்ததான முகாம் 19.09.2014” ரியாத்
மண்டலம் ஹஜ் பயணிகளுக்காக
ரியாதில் மாபெரும் இரத்த தான முகாம்! சுமார் 327 யூனிட் குறுதிக்கொடை!!
இரத்த
தானங்கள் செய்து உயிர்களைக் காப்பதில் தொடர்ந்து
பல வருடங்களாக தமிழகத்தில்
முதலிடத்தில் இருந்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
பல கேடயங்களையும்
பாராட்டுக்களையும் பெற்றதை அனைவரும் அறிவர். தமிழகம் மட்டுமின்றி வெளி
மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் மனித நேயத்தை இது போன்ற இரத்ததான சேவைகள் மூலம் அது செய்து வருவதுடன் தற்போது உலகம்
முழுவதிலிமிருந்து முஸ்லிம்கள் ஹஜ் செய்வதற்காக மக்கா மாநகருக்கு வந்திருப்பதால் அவர்களில்
தேவைப்படுவோருக்கு அவசர காலத்தில் வழங்குவதற்காக ஜித்தாஹ் மற்றும் தம்மாம்
மண்டலங்களைத் தொடர்ந்து அல்லாஹ்வின் மாபெரும்
கிருபையினால் TNTJ ரியாத் மண்டலமும், ரியாதிலுள்ள
கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) யில் 19.09.2014
வெள்ளியன்று 32வது மெகா இரத்த தான முகாம் ஒன்றை நடத்தியது. இது ஹஜ் செய்ய வரும் பயணிகளுக்காக ரியாத் மண்டலம் சார்பாக நடத்தப்பட்ட 8 வது
மாபெரும் முகாம் ஆகும்.
இந்த முகாமில் கிட்டத்தட்ட 375 சகோதர-சகோதரிகள் கலந்து கொண்டனர். காலை 8:30 மணிக்கு துவங்கிய இம்முகாமில் பெண்கள் உட்பட 327 பேரிடம் மட்டும் இரத்தம் பெறப்பட்டது நேரமின்மை, இரத்த அழுத்தம் அதிகம், ஹீமோகுளோபின் குறைவு, ஹஜ்ஜூக்காக தடுப்பூசி போடப்பட்டது போன்ற காரணங்களினால் பல சகோதர சகோதரிகளால் இரத்தம் வழங்க முடியவில்லை. மாலை 5 மணிக்குப் பிறகும் கொடையாளிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்த நிலையில், காலையிலிருந்து தொடர்ச்சியாக பணியாற்றிய இரத்த வங்கி ஊழியர்கள் களைப்புற்ற காரணத்தால், மாலை 5:30 மணிக்கு முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள, முகாமில் 354 நபர்களோடு பதிவு செய்வது நிறுத்தப்பட்டு சுமார் 150 லிட்டருக்கு மேல் இரத்தம் பெறப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்!

இரத்த வங்கி கண்கானிப்பாளர் சகோதரி டாக்டர். ரிஹாம் அஸ்சுவையா, சகோ. டாக்டர் சஊத் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சகோ. ஜேம்ஸ் சிடாண்டோ ஆகியோர் குருதிக் கொடையளித்தவர் களுக்கும் ரியாத் TNTJ - யினருக்கும் நன்றி தெரிவித்தனர். ரியாத் மண்டலத்தின் மருத்துவ அணி பொறுப்பாளரும் மண்டலச் செயலாளருமான சகோ. சோழபுரம் ஹாஜா, தலைமையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொண்டர் அணி பொறுப்பாளர், துணைச் செயலாளர் சகோ. முஹம்மது ஷாகிர் தலைமையில், தொண்டர் அணியின் கடுமையான உழைப்பும் ஒத்துழைப்பும் இம்முகாம் சிறப்புடன் நடைபெற முக்கிய காரணமாக அமைந்தது. மண்டல நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பம்பரமாக சுழன்று பணியாற்றினர். பலர் தத்தமது வாகனங்கள் மூலமாக கொடையாளிகளை முகாமுக்கு அழைத்து வந்து வாகன பற்றாக்குறையை நிவர்த்தி செய்தனர்.
இரத்தம் வழங்கும் கொடையாளிகள், முந்தைய இரவு நன்றாக குறைந்தது 5-6 மணி நேரமாவது உறங்கியிருக்க வேண்டும் என்றும், திரவ உணவுகளை சாப்பிட்டிருக்க வேண்டும் எனவும் கொடையாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முஸ்லிமல்லாத தமிழ் சகோதரர்களும் கலந்து கொண்டு, TNTJ வினரின் பணியை பாராட்டினர்.
இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஏமன், சிரியா, மற்றும் சவுதி நாட்டவர்களும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஹ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த சகோதரர்களும் இம்முகாமில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. கலந்து கொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டியும், மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும், வெளிநாடுகளிலேயே
அதிகமாக இரத்ததானம் செய்த மண்டலம்
என்ற இடத்தை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் தக்க
வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது!
புகழ் அனைத்தும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே!
No comments:
Post a Comment