“செயற்குழுக் கூட்டம்”– ரியாத் மண்டலம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டல செயற்குழுக்கூட்டம் 05.09.2014 வெள்ளியன்று காலை 9 மணிக்கு மண்ட செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா முன்னிலையில் நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. யூனூஸ் “அழைப்புப் பணியின் அவசியம்” என்ற தலைப்பில் துவக்கவுரையாற்றினார். தொடர்ந்து, 32வது மெகா இரத்ததான முகாம் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பேசப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது மேலும் தஃவா பணிகளுக்கான மேம்பாடு குறித்து திட்டங்கள் போடப்பட்டு சென்ற மாதம் கிளைகள் செய்திருந்த பணிகள் குறித்தும் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதில் செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தஃவாவின் நலன் கருதி முன்வைத்தனர்.
No comments:
Post a Comment