"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" - ரியாத் மண்டலம்
ரியாத் மண்டலத்தின் சார்பாக பிற மத சகோதரர்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" 15-05-2015 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்சியில் மாற்றுமத சகோதரர்கள் உட்பட சகோதர சகோதரிகள் முன்னூறுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இஸ்லாம் பற்றிய முன்னுரையுடன் கூடிய கேள்விகளுக்கான பதிலை மாநிலத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில தாயீ சகோ. M.S. சையத் இப்ராஹீம் அவர்கள் அளித்தார்.
கலந்து கொண்ட பிறமத சகோதரர்கள் அனைவருக்கும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் தொகுப்பான 5 DVD set, இஸ்லாமிய புத்தகங்கள், மற்றும் நினைவு பரிசு வழங்கி இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது.
No comments:
Post a Comment