“நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம்”– ரியாத் மண்டலம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05.01.2015 திங்கள் கிழமை இரவு 8 மணிக்கு ரியாத் மண்டல TNTJ அலுவலகத்தில் மண்டல நிர்வாகக் கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. ரியாத் மண்டல நிர்வாகிகள் மற்றும் அணிச் செயலாளர்கள் கலந்து கொண்ட இந்த அமர்வில் முக்கியமாக நிதி நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டு எதிர் வரும் ஜனவரி 23-ல் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையோடு சேர்ந்து இந்திய குடியரசு தினத்ததை முன்னிட்டு 33ஆவது இரத்ததான முகாமை ஏற்பாடு செய்து நடத்திட வேண்டிய ஆலோசனைகள் மற்றும் திட்டங்கள் வகுக்கப்பட்டன.
ரியாத் மண்டல கிளைகள் மற்றும் கேம்ப் பயான்களை அதிகரிக்கவும், ஆன்லைன் நிகழ்ச்சி (நியூசெனைய்யா) சார்பாக நடத்த வேண்டிய திட்டம், மேலும் பல நல்ல அம்சங்களை முன் வைத்து நடந்த இந்த நிர்வாகக் குழு அமர்வு, இறை மார்க்கத்தை அதன் தூய வடிவில் அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் பணியில் தம்மால் இயன்ற ஒத்துழைப்புகளையும், உதவிகளையும் அனைவரும் நல்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டு துஆவுடன் கூட்டம் இரவு 11 மணிக்கு நிறைவுற்றது .
No comments:
Post a Comment