“அழைப்பு பணியின் அவசியம்” – நியூசெனைய்யா கிளை (காஃப்கோ புதிய கேம்ப் ) உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையாலும் நியூசெனைய்யா கிளை நிர்வாகிகளின் சீரிய முயற்சியாலும் நியூசெனைய்யா பகுதியில் புதிய கேம்ப் 28.01.2015 புதன்கிழமையன்று இரவு 8 மணிக்கு பிறகு மண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானி தலைமையில் காஃப்கோ என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. நியூசெனைய்யா கிளை தலைவர் சகோ. நூர் முஹம்மது துவக்கவுரையுடன் ஆரம்ப்பிக்கப்பட்ட இந்த அமர்வில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகள்,அதன் நிலைபாடு மற்றும் பொறுப்பாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் பற்றி எடுத்துரைத்து அழைப்புப் பணியின் அவசியம் குறித்தும் மண்டல செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா உரையாற்றினார். இதி்ல் நியூசெனைய்யா கிளை நிர்வாகிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மாதந்தோறும் 4 வது வாரம் புதன்கிழமை இரவு 8 மணிக்கு பயான் நடத்த ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment