“அழைப்பு பணியின் அவசியம்” – சித்தீன் கிளை (சாரா புதிய கேம்ப் ) உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் சித்தீன் கிளை நிர்வாகிகளின் சீரிய முயற்சியாலும் ரியாத் மண்டல நிர்வாகிகளின் ஆலோசணையின்படி Exit 15 அல் ரவாபி பகுதியில் மேலும் ஒரு புதிய கேம்ப் 17.01.2015 சனிக்கிழமையன்று இஷாவிற்கு பிறகு சரார கேம்ப் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. சித்தீன் கிளைத் தலைவர் சகோ. செய்யது அலி தலைமையில் மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக் , “அழைப்பு பணியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகள், அதன் நிலைபாடு மற்றும் பொறுப்பாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து மண்டல செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா எடுத்துரைத்தார். பலர் ஆர்வமுடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடைந்தனர். மேலும் கிளை சார்பாக"எளிய திக்ருகள் ஏராளமான நன்மைகள் "என்ற நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. புகழ் அனைத்தும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே.
No comments:
Post a Comment