“கொள்கையும் அழைப்புப் பணியும்” - கதீம் செனைய்யா கிளை (அல்மானிலயா புதிய கேம்ப்) உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கதீம் செனைய்யா கிளையின் புதிய முயற்சியாக மக்களிடம் அதிகமான தஃவா பணிகளை கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் 24.01.2015 சனிக்கிழமை கதீம் செனைய்யா பகுதியில் மேலும் ஓர் புதிய கேம்ப்உருவாக்கப்பட்டது. கிளைத் தலைவர் நெளஷாத் தலைமையில் மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன், “கொள்கையும் அழைப்புப் பணியும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகளைப் பற்றி மண்டல துணைச் செயலாளர் சகோ. ஷாகீர் விரிவாக எடுத்துரைத்தார். பல சகோதரர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பயன்பெற்றனர். அதைத் தொடர்ந்து "எளிய திக்ருக்கள் எராளமான நன்மைகள்”, “தினமும் குா்ஆனை ஓதுவோம்” போன்ற தலைப்புகளில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment