அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

மண்டல செயற்குழு கூட்டம்”– ரியாத் மண்டலம் - 01.05.15

மண்டல செயற்குழு கூட்டம்– ரியாத் மண்டலம் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் நான்காம் செயற்குழு கூட்டம் 01-05-2015 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை ரியாத் மண்டல மர்கஸ்ஸில் நடைபெற்றது. இதில் மண்டல செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். 
இச்செயற்குழுவில் துவக்க உரையாக மண்டல துணை தலைவர் சகோ. முஹம்மத் அமீன் "தூய்மையான எண்ணம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். மக்களுக்கு தெளிவாக விளங்கும் பொருட்டு POWER POINT PRESENTATION மூலம் "மண்டல நிர்வாக நிலைப்பாடுகள்" பற்றி மண்டல தலைவர் சகோ. கோவை இர்ஷாத் அவர்களும், "மூன்று மாதங்களுக்கான தாவா செயல் திட்டம்" பற்றி மண்டல செயலாளர் சகோ முஹம்மத் யூனுஸ் அவர்களும், "மண்டல பொருளாதார திட்டங்கள் மற்றும் செயல் முறை" பற்றி மண்டல பொருளாளர் சகோ. தௌபீக் அவர்களும் விளக்கமளித்து அந்தந்த தலைப்புகளில் கேட்கப்பட்ட சந்தேகங்களுக்கும் தெளிவாக பதிலளிக்கப்பட்டது.
இறுதியாக காலியாக இருந்த இரண்டு மண்டல துணை செயலாளர்களை செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். மேலும் மூன்று மண்டல அணிச்செயலாளர்கள் மண்டல நிர்வாகத்தினால் நியமனம் செய்து செயற்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.