அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

லைலா அஃப்லாஜ் கிளையில் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் திரும்பிய 2 இலங்கை மற்றும் 1 தமிழக சகோதரர்கள் - ரியாத் TNTJ

லைலா அஃப்லாஜ் கிளையில் இந்து மதத்திலிருந்து இஸ்லாம்  திரும்பிய  2 இலங்கை மற்றும் 1 தமிழக சகோதரர்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவ பிரச்சாரங்களால் தமிழகம் ஏகத்துவ கோட்டையாக மாறி வரும் வேளையில் பிறநாடுகளிலும் பிற மத சகோதரர்கள் இஸ்லாத்தை விரும்பி ஏற்ற வண்ணமுள்ளனர். ரியாத் மண்டலத்தில் இந்நிகழ்வு அடிக்கடி நடைபெறுகின்றது அல்ஹம்துலில்லாஹ்...

இதன் தொடர்ச்சியாக கடந்த 18-12-2014 வியாழக்கிழமையன்று ரியாத் மண்டலத்திற்குட்பட்ட லைலா அஃப்லாஜ் கிளை  பயானில் இலங்கையைச் சார்ந்த வி்மலக்கண்ணண் அஸ்லம் என்ற பெயரிலும், அமிர்தராஜ் என்பவர் அமீர் என்ற பெயரிலும் மற்றும் தமிழகத்தைச் சார்ந்த ஓர் இந்துமத சகோதரர் அனீஸ் என்ற பெயரிலும் இஸ்லாத்தைதனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள் அல்லாஹு அக்பர்.

ரியாத் மண்டல நிர்வாகிகள் வழிகாட்டுதலில் அஃப்லாஜ் கிளைச் சகோதரர்கள் மூலம் இஸ்லாத்தினை அறியத் தொடங்கிய மூவரும் கடந்த ஒரு மாத காலமாக தனது கஃபிலுடைய அனுமதியுடன் அவர்களுக்கு இஸ்லாம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆக்கங்கள், புத்தங்கள் மற்றும் குருந்தகடுகள் வழங்கப்பட்டு கிளை சார்பாக அவர்களுக்கு தொடர் தஃவா செய்யப்பட்டு வந்தது. இவர்களுக்கு ரியாத் மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் மண்டல பேச்சாளர் சகோ. ஷேக் தாவூது அவர்கள் கலிமா சொல்லிக் கொடுத்தார். இஸ்லாத்தைஇன்முகத்துடன் ஏற்ற அவர்கள் தங்களது குடும்பத்தினரையும் இந்த சத்திய இஸ்லாத்தின் பால் கொண்டு வர ஆர்வம் கொண்டுள்ளதாகவும் மேலும் அவர்களில் ஒருவர் (அஸ்லம்) மனைவி ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அறிவித்தார்.  புதிய சகோதரர்களுக்கு ரியாத் மண்டல நான் முஸ்லீம் தஃவா பொறுப்பாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் அவர்கள் ரியாத் மண்டலம் சார்பாக குர்ஆன் தர்ஜூமா மற்றும் புத்தகங்களை வழங்கினார். புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.